(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ எக்காரணத்துக்காகவும் பதவி விலகமாட்டார், அதற்கான அவசியமும் கிடையாது.பெரும்பான்மை பலம் எம்மிடமே உள்ளது.அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்.
எதிர்தரப்பினரும,சுயாதீன குழுக்களும் ஊடக சந்திப்பில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வராமல் நாடாளுமன்றில் கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்ளவும்,வெற்றிகொள்ளவும் தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் நீக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.