Our Feeds


Tuesday, April 19, 2022

ShortTalk

அவிசாவளையில் பதற்ற நிலை: இ.போ.ச, தனியார் பஸ் சாரதிகள் வாய்த்தர்க்கம், போக்குவரத்தும் தடைப்பட்டது!



நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை முதல் அவிசாவளை – கொழும்பு பிரதான வீதி உக்குவத்தை சந்தியில் தனியார் பஸ் சாரதிகள் பிரதான வீதியை மறித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் அவிசாவளை – கொழும்பு விதியில் போக்குவரத்து தடைப்பட்டதுடன் பொதுமக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

அவிசாவளையிலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் சகல தனியார் பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் சாரதிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டத்துடன் பிரதான பாதையை மறித்தும் அரசாங்கத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியிலுள்ள அவிசாவளை தனியார் பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக தனியார் பஸ் ஒன்றை பாதையின் குறுக்கே நிறுத்தியும் நகர முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனங்களை பாதை நடுவே தரித்து வைத்தும் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்றும் பிரதான பாதையில் போக்குவரத்தில் ஈடுப்பட்டுள்ள அரச பஸ்களையும் சேவையில் ஈடுபட முடியாதவாறு தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.

இதனால் தனியார் பஸ் சாரதிகளுக்கும் இபோச பஸ் சாரதிகளுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இவ்வாறான நிலைமையடுத்து பிரதான வீதியின் ஊடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »