இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின் போது அமைச்சுப் பதவிகள் கிடைக்காத ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சுப் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் அவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அறியமுடிகிறது.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது கட்சியின் தலைவரிடம் இது குறித்து அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் ஆதரவு வழங்குவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.