ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உடனடியாக பதவியில் இருந்து விலகி இடைக்கால அரசாங்கமொன்றை நியமிக்க வேண்டுமென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விசேட வைத்தியர்கள் சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விசேட வைத்தியர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.