Our Feeds


Friday, April 8, 2022

ShortNews

ஜனாதிபதி அலுவலகத்தில் ரணில் – கோட்டா திடீர் சந்திப்பு!

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுதல், ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவின் உதவியை பெற்று கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »