முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி இன்று பல ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு முன்னால் இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
