(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மக்களின் போராட்டம் என கூறிக் கொண்டு திட்டமிட்ட வகையில் தவறான நோக்கங்களுடன் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸ் மா அதிபர் இரட்டை வேடம் போடுகிறார்.
போராட்டங்களை முடக்க ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது உச்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் இல்லாவிடின் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (05) ஆரம்பமானதை தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாட்டு மக்;கள் தன்னிச்சையான முறையில் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என குறிப்பிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களின் அமைதி வழி போராட்டம் தற்போது அரசியல் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
