Our Feeds


Sunday, April 24, 2022

ShortTalk

இலங்கைக்கு பாரிய கடன் அழுத்தத்தை பிரயோகிக்கும் UAE யின் பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் - என்ன நடக்கும்?



ஐக்கிய அரபு இராட்சியத்தை சேர்ந்த பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு பாரிய கடன் அழுத்தத்தை பிரயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய அரபு இராட்சிய நிறுவனத்திடம் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவிற்கே இந்த அழுத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடன்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்பவற்றுக்கான கடன் வழங்கலை இலங்கை அரசாங்கம் பிற்போட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நிறுவனம் 95,000 மெட்ரிக் டன் எண்ணெய்யை இலங்கைக்கு விநியோகித்து அதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கு 200 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »