அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு வாரங்கள் கடந்த போதிலும் உறுதியாக எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிப்பதாகவும் ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
“மக்கள் இன்னும் வரிசையில் நிற்கிறார்கள். அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து மக்களின் துன்பங்களை மறந்துவிடாதீர்கள், என்று சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
