Our Feeds


Tuesday, May 17, 2022

ShortTalk

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று - என்ன நடக்கும்?



புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, பிரதி சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை பரிந்துரைக்கவுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவின் போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பாகும் சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களுக்கான ஆசனத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

இதற்கமைய, இதுவரையில் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல் 8.30 அளவில் இடம்பெறவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »