Our Feeds


Saturday, May 14, 2022

ShortTalk

JUST_IN : கோட்டா அரசுக்கு ஆதரவளித்து சுயாதீன MPயாக செயல்பட தயாரானாரா கபீர் ஹாஷிம்?



ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து சுயேதீன எம்.பி.யாக தீர்மானித்துள்ளதாக பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகும் செய்தியை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நான்கு நிபந்தனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தது. மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எனது கட்சி முன்வைத்துள்ள இந்த நிபந்தனைகள் மிகவும் நியாயமானவை என்பதையும், கட்சியின் இந்த நிலைப்பாட்டுடன் நான் உடன்படுகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சியின் கொள்கைகளுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்க மாட்டோம் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நம் நாட்டு மக்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளைக் கொண்டு வருவதற்கும் நாங்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்த அவர், அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் நேர்மறையான பொருளாதார சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பதற்கு விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பும் #gotagogama மற்றும் மக்கள் கோரும் ஏனைய நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »