Our Feeds


Tuesday, May 31, 2022

ShortTalk

PHOTOS: அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் கொலையைக் கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்!



(வாஸ் கூஞ்ஞ)


பண்டாரகம அட்டுலுகமவைச் சேர்ந்த சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலையைக் கண்டித்து வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியம் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (31) மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடத்தியது.

இந்தப் போராட்டத்தின்போது ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏன் வன்கொடுமை’ ‘சிறுவர் துஷ்பிரயோகத்தை நிறுத்து’ ‘சிறுவர்களே எமது எதிர்காலம்’ ‘சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்’ போன்ற பதாதைகளை தாங்கியவர்களாக கோஷங்களை எழுப்பினர்.

இவ்வாறான வன்முறைகள் இருந்து சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றுவது பாதுகாப்பது சமூகத்தினதும் அரசினதும் கடமையாகும்
இலங்கையில் சட்ட ஆட்சி முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை சிறுமியின் கொலைச் சம்பவம் கண்கூடாக காட்டி நிற்கிறது.

இலங்கையில் சட்டங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தல் மற்றும் பாரபட்சமான போக்கு என்பன குற்றவாளிகளை தப்பிக்க வைத்து பாதுகாக்கப்படும் நடைமுறை காணப்படுகின்றது.

இதனால் குற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டே இருக்கின்றனர்

சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் பொறுப்பான குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவது குற்றவாளிகயை உருவாக்குவதாகவே அமையும்.

எனவே சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கமே இணைய வேண்டும் எனக் கூறுகிறோம் மேலும் 9 வயது சிறுமி கொடூரமான கொலைகள் உண்மைத்தன்மை வெளிக்கொணர வேண்டும்

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த வன்முறைகள் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றில் பல வருடங்களாக நிலுவையில் இருந்து வருகின்றன போன்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »