இன்றும் தனியார் பஸ் சேவைகள் 80 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி இன்று 14,000 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை மேலும் சில கிராமப்புறங்களில், பஸ் சேவைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், பாடசாலை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாகாணங்களுக்கிடையிலான தனியார் பஸ் சேவைகளும் சுமார் 70 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பஸ் சேவைகள் குறைந்துள்ளதால், தற்போது பலர் ரயில் மூலம் தங்களது போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இன்று காலையும் அதிக எண்ணிக்கையான பயணிகள் ரயிலில் கொழும்புக்கு வருவதை காணக்கூடியதாக இருந்தது.