அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (18) கண்டி – கட்டுக்கலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெறவுள்ளது.
இதன்போது அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக சபை தெரிவு நடைபெறவுள்ளது.
இந்த பொதுக் கூட்டத்திற்கு சுமார் 8,000 உறுப்பினர்களைக் கொண்ட உலமா சபையின் கிளைகளின் பிரதிநிதிகள் மாத்திரமே அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றார்.
இந்த நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பதவியில் மாற்றமொன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.