Our Feeds


Wednesday, June 29, 2022

SHAHNI RAMEES

அமெரிக்காவில் கண்டெய்னர் லொறியில் 46 உடல்கள் மீட்பு...!

 

அமெரிக்காவின் சான் ஆன்டோனியா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறிரியிலிருந்து அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த பொலிஸார், கண்டேய்னர் லொறியை திறந்து பார்த்தபோது, அங்கே 46 பேர் சடலங்களாகக் கிடந்தனர். 16 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்றது. மீட்கப்பட்ட 16 பேரில் 12 பேர் பெரியவர்கள், 4 பேர் குழந்தைகள் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 சக்கரம் கொண்ட அந்த கண்டெய்னர் லொறி மூலம், வெளிநாடு தப்ப நினைத்த 100இற்கும் மேற்பட்ட அகதிகள், கண்டெய்னருக்குள் காற்று இல்லாமை மற்றும் வெப்பம் காரணமாக உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்குள் அகதிகளாக வந்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்குத் தப்ப முயல்பவர்கள், இதுபோன்று பலியாகும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »