Our Feeds


Thursday, June 2, 2022

ShortTalk

வெளிநாடு செல்ல முயற்சிக்கும் இலங்கை மக்கள் - 5 மாதங்களில் 288,645 பேருக்கு கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டதாக கூறுகிறது குடிவரவு, குடியகல்வு திணைக்களம்!



(எம்.எம்.சில்வெஸ்டர்)


இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் கடவுசீட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான பியூமி பண்டார தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் 382,506 கடவுச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பியூமி பண்டார,

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாது பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளதாகவும், இதனால் அதிகமானோர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரியில் 52,278 உம், பெப்ரவரியில் 55,381 உம், மார்ச்சில் 74,890 உம், ஏப்ரலில் 53,151 உம், மே மாதம் 52,945 ஆகிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், ஆயிரகணக்கானோர் கடவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வருவதனால் எமது அதிகாரிகள் கடமைகளை மேற்கொள்வதில் பாரிய சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும்,

முன்பதிவு செய்யாதவர்கள் தலைமை அலுவலகத்தைச் சுற்றி நாளாந்தம் பல கிலோ மீற்றர் தூரம் வரிசையில் நிற்பதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »