Our Feeds


Friday, June 24, 2022

SHAHNI RAMEES

ஆஸி வசமான 5ஆவது போட்டி – ஒருநாள் தொடர் இலங்கை வசமானது


 இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து, 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 39.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

எவ்வாறாயினும், 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 3இற்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »