Our Feeds


Tuesday, June 28, 2022

ShortNews

வெற்றியளிக்காத 5 நிதி நிறுவனங்களை கலைக்க முடிவு - மத்திய வங்கியின் ஆலோசனைக் குழுவினால் பரிந்துரை



ஐந்து வெற்றியளிக்காத நிதிக் கம்பனிகளை உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வெற்றியளிக்காத 05 நிதிக் கம்பனிகளுக்காக அதாவது இக்கம்பனிகளின் அனுமதிப்பத்திரங்கள், இரத்துச் செய்யப்பட்டுள்ள அல்லது இடைநிறுத்தப்பட்டுடுள்ள Central Investments & Finance Ltd., ETI Finance Ltd., TKS Finance Ltd., The Finance Company PLC and The Standard Credit Finance Ltd ஆகியவற்றிற்கு சாத்தியமான புத்துயிரளித்தல் தொடர்பில் பரீட்சிப்பதற்கு, வெற்றியளிக்காத நிதிக் கம்பனிகளை புத்துயிரளிப்பதற்கான ஆலோசனைக் குழுவொன்று 2021 ஒக்டோபரில் நிறுவப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து வெற்றியளிக்காத நிதிக் கம்பனிகளுக்காகவும் சாத்தியமான புத்துயிரளித்தல் தெரிவுகளைப் பரிந்துரைக்கும் அல்லது அத்தகைய புத்துயிரளித்தல் தெரிவுகள் சாத்தியமற்றுக் காணப்படுமாயின் அவற்றை கலைப்பதைப் பரிந்துரைக்கும் பொறுப்பு இக்குழுவிற்கு நாணயச் சபையினால் உரித்தளிக்கப்பட்டிருந்தது.

மேலே குறிக்கப்பட்ட கம்பனிகளில் நான்கின் (4) புத்துயிரளித்தலுக்காக வேறுபட்ட தரப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளையும் கவனமாகப் பரிசீலித்ததன் பின்னர் இக்குழு அதன் இறுதி அறிக்கையினை கடந்த மே 31ஆம் திகதி நாணயச் சபைக்குச் சமர்ப்பித்தது.

நாணயச் சபையானது, சொல்லப்பட்ட ஐந்து வெற்றியளிக்காத நிதிக் கம்பனிகள் மீதுமான குழுவின் அறிக்கையினைப் பரிசீலனையிற்கொண்டு, சொல்லப்பட்ட குழுவின் பரிசீலனைக்காக கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகள் ஈடேறக்கூடியவையல்ல என்றும் பல எண்ணிக்கையான கொள்கை மற்றும் சட்ட ரீதியான உள்ளார்ந்தங்களை கொண்டுள்ளதால் ஏற்கனவே காணப்படுகின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினுள் பணியாற்றத்தக்கவையாக இவை தோன்றவில்லை  என்றும் அவதானத்தில் கொண்டது.

மேலும், தற்போதைய பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொள்கையில் முதலீட்டாளர்களாக வரக்கூடியவர்களிடமிருந்து ஏதேனும் ஈடேறக்கூடிய  முன்மொழிவுகள் கிடைக்கப்பெறுமென சொல்லப்பட்ட குழு எதிர்பார்க்கவில்லை.

இச்சூழ்நிலைகளின் கீழ் வெற்றியளிக்காத ஐந்து (5) நிதிக் கம்பனிகள் தொடர்பிலுமான ஒரேயொரு தெரிவு, கலைத்தல் நடவடிக்கைமுறைகளை/ கலைப்பதற்கான கோவைப்படுத்தலை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவே அமையும். மேற்குறித்தவற்றின் நோக்கில், குழுவானது அதன் அறிக்கையில் குழுவை முடிவுறுத்துவதற்குப் பரிந்துரைத்துள்ளது. குழுவின் பரிந்துரையினை அடிப்படையாகக் கொண்டு நாணயச் சபை குழுவினைக் கலைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

இதன் விளைவாக, மேலே குறிப்பிட்ட ஐந்து வெற்றியளிக்காத நிதிக் கம்பனிகளையும் ஏற்புடைய சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக கலைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »