Our Feeds


Friday, June 10, 2022

SHAHNI RAMEES

நாட்டிற்க்கு 65,000 மெட்ரிக் டொன் யூரியா வருகிறது....

 

அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் 65 ஆயிரம் மெட்ரி டொன் யூரியா உரம் இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு  கிடைக்கவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மரக்கறி பயிர் செய்கைகளுக்கான தேவையான உரம் தொடர்பில் பிரச்சனை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

உரம் தொடர்பில் நேற்று (9) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உரத்தை வெளிநாடுகள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளனர். எனினும் இந்தியா எமது நட்பு நாடு என்பதால் அந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் உரத்தில், 65 ஆயிரம் மெட்ரிக் டொன் உரத்தை எமக்கு வழங்குவதற்கு இணங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

எனவே அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் இந்த உரம் இலங்கைக்கு கிடைக்கும். உரம் கிடைத்ததும், அதனை 10 ஆயிரம் ரூபாய்க்கு  நெல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  இந்தியாவிலிருந்து கிடைக்கும் 65 ஆயிரம் மெட்ரிக் டொன் உரத்தில், 10 ஆயிரம் மெட்ரிக் டொன்னை தேயிலை பயிர்ச்செய்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »