Our Feeds


Friday, June 17, 2022

SHAHNI RAMEES

டான் பிரியசாத்துக்கு வழங்கப்பட்ட பிணை இரத்துச் செய்யப்பட்டது!



டான் பிரியசாத் எனப்படும் அபேரத்ன சுரேஷ் பிரியசாத்துக்கு வழங்கப்பட்ட

பிணையை இரத்துச் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தை குறி வைத்து வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட டான் பிரியசாத் என்பவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையிலே இந்தப் பிணை இந்த இரத்துச் செய்யப்பட்டது.

2014 ஆம் ஆண்டு பிணை வழங்கியதிலிருந்து சந்தேக நபர் டான் பிரியசாத் பல சந்தர்ப்பங்களில் பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாக நீதிவான் திலினி கமகே அவரது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 9 மே 2022 அன்று மைனா கோகம மற்றும் கோட்டகோகமவில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக சிஐடியினரால் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பிணை இரத்து தொடர்பான உத்தரவு இன்று வெளியாகும் வரை டான் பிரியசாத்துக்கு பிணை மறுக்கப்பட்டது.

இன்றைய (17) பிணை இரத்து விண்ணப்பத்தை முறைப்பாட்டாளருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் பசன் வீரசிங்க மற்றும் இர்சாத் மொஹமட் ஆகியோர் ஆஜராகினர். சந்தேக நபரான டான் பிரியசாத் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜயந்த டயஸ் நாணயக்கார ஆஜராகியிருந்ததுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »