இளம் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பின் அவரைக் கொலை செய்தமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட வைத்தியர் ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தாதும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குற்றவாளியான வைத்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் 15 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதியடுத்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் தன்னிடம் சிக்சைக்காக வந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு குறித்த வைத்தியரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
