இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் இன்று (28) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் முத்துராஜவெல முனையத்தில் இருந்து எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று சிபெட்கோ எரிவாயு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
