அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி, மகள் உட்பட மேலும் 25 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
ரஷ்யாவின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அமெரிக்கா விதித்த தடைகளுக்கு பதிலடியாக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், மகள் ஆஷ்லி பைடன், அமெரிக்காவின் நியூ யோர்க் மாநில செனட்டர் கேர்ஸ்டன் கிலிபிராண்ட், மேய்ன் மாநில செட்டனர் சுசான் கொலின்ஸ், கென்டக்கி செனட்டர் மிட்ச் மெக்கென்னல், ஐயோவா செனட்டர் சார்ள்ஸ் கிராஸ்லி உட்பட பல செனட்டர்களும் புதிதாக தடை விதிக்கப்பட்டேரிரன் பட்டியலில் அடங்கியுளனைர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பலருக்கு கடந்த மே மாதம் ரஷ்யா தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
