சுவிட்ஸர்லாந்தின் வான்பரப்பை அந்நாட்டு அரசாங்கம் மூடியுள்ளது. சுவிட்ஸர்லாந்த வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வலையமைப்பில் ஏற்பட்ட கணினி கோளாறே இதற்குக் காரணம்.
சுவிட்ஸர்லாந்தின் வான் போக்குவரத்து கடடுப்பாட்டுச் சேiவாயன ஸ்கைகைட் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், “ஸ்கைகைட் கணினிக் கோளாறை அடுத்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக சுவிஸ் வான்பரப்பானது போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தள்ளது.
இக்கோளாறு தொடர்பான விபரங்களை ஸ்கைகைட் வெளியிடவில்லை. எனினும், இச்சம்பவத்தினால், ஜெனீவா மற்றும் சூரிச் விமான நிலையங்களின் பயணிகள், வாடிக்கையாளர்கள், பங்காளர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளுக்காக தான் வருந்துவதாகத் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 11 மணி வரை, (இலங்கை, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிவரை) விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டிருக்கும் என ஜெனீவா விமான நிலையம் முன்னர் தெரிவித்திருந்தது.
இதேவேளை, சுவிட்ஸர்லாந்துக்கு நோக்கி பறக்கும் சர்வதேச விமானங்கள், இத்தாலியின் மிலான் நகருக்கு திசை திருப்பப்படுவதாக சுவிட்ஸர்லாந்து செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
