Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

தற்போது லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 

தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு இருப்பு உள்ளதால், வீட்டு எரிவாயு சிலிண்டர்களைப் பெற வரிசையில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி இறக்கப்பட்ட எரிவாயு தகனச்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது உள்ள கையிருப்பு தீர்ந்த பின்னர், புதிய எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்கான ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

லிட்ரோ வட்டாரங்களின்படி, அடுத்த எரிவாயு தொகை நாட்டை வந்தடைய குறைந்தது 3 வாரங்கள் ஆகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »