கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறையை சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 60 லிட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நாளை மறுதினம் (30) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹல பியன்வல பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 460 லிட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடவத்தையை சேர்ந்த 48 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எத்திமலே பகுதியிலும் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 60 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேகநபரிடமிருந்து 1220 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
