Our Feeds


Tuesday, June 14, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 

கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா (Influenza) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இந்நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை நோய்க்கான அடிப்படை அறிகுறிகளாகும் என வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.

சிறுவர்கள் மத்தியில் இந்நோய் எளிதில் பரவக்கூடியது. இதனால் சிறுவர்கள மற்றும் பெரியவர்கள் தவறாமல் கைகளை கழுவ வேண்டும் என்றும் குறிப்பாக வகுப்பறைகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது முக கவசத்தை அணிவது மிக முக்கியமானது என்றும் வைத்தியர் தீபால் பெரேரா கூறினார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு இயற்கை திரவங்கள், பரிந்துரைக்கப்பட்ட பாராசிட்டமால் குளிசை வழங்கலாம் என்று தெரிவித்த அவர் இவ்வாறானவர்களுக்கு ஓய்வும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »