Our Feeds


Tuesday, June 14, 2022

SHAHNI RAMEES

இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை...!

 

இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஞானதாச பெரேரா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவர்கள் தற்போது மதுபானங்களின் விலைகள் அதிகரித்து வருகின்றமை காரணமாக மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த போதையை தூண்டும் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவற்றினை கட்டுப்படுத்த தவறினால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஞானதாச பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்றம், அதிகரித்துள்ள சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்கள் மற்றும் மதுபானங்களின் விலையேற்றம் என்பன இதற்குக் காரணங்களாக அமைந்துள்ள எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »