Our Feeds


Thursday, June 2, 2022

ShortTalk

கோட்டா அரசு பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு பயப்படுகிறது - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.



மாணவர்களின் போராட்டத்தை அடக்குவதற்காகவே அரசாங்கம் பல்கலைக்கழகங்களை மூடி வைத்திருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.


இதன் காரணமாகவே தற்போது வரையில் எந்தவொரு பல்கலைக்கழகங்களும் திறக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு 5 வருடங்களுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று (02) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் கலந்துரையாடுவதற்காக இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு செல்லவிருந்த போதிலும், இன்று அவர் சமூகமளிக்காத காரணத்தினால் உபதலைவருடன் கலந்துரையாடியதாக வசந்த முதலிகே தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »