கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் வைத்து அண்மையில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்துவாரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 75 ஆவது தோட்டம் பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 5 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் அளுத்மாவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
இவர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
