Our Feeds


Monday, June 27, 2022

ShortNews

இஸ்திஹாரா முடிந்தது - உலமா சபையின் தலைவராக தான் தொடரவுள்ளதாக அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அறிவிப்பு



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார்.


கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை கண்டி, கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற உலமா சபையின் பொதுக் கூட்டத்தில் றிஸ்வி முப்தி மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும், தலைமைப் பதவியில் இருப்பதா? இல்லையா? என்று இஸ்திகாரா செய்து தீர்மானிக்க உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவிடம் ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார்.

இவ்வாறான நிலையில் புதிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மீண்டும்  சனிக்கிழமை (26) கொழும்பில் கூடியது. இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார்.

கடந்த 20 வருட காலமாக ஒன்பது தடவைகள் இவர் உலமா சபையின்  தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2001ல் உலமா சபையின் யாப்பு முறையாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார்.

என்றாலும் 2003 இல் மீண்டும் தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட இவர், 2004 இன் பின்பு ஒவ்வோர் மூன்று வருட காலத்திற்கும் தலைவராக தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். எனினும், கடந்த 2016லும், 2019லும் இவர் பதவியிலிருந்து விலகுவதற்கு அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


நன்றி: விடியல்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »