நாடாளுமன்ற அமர்வுகளை 3 நாட்களுக்கு மட்டுப்படுத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடியே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த வாரம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (30) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று கூடியபோதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.