வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் நேற்று நள்ளிரவு டோஹா நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.
இதேவேளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அதிகாலை டுபாய் நோக்கி பயணமானார்.
ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.
