எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் அரச ஊழியர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அரச அலுவலக பணிகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு ஒன்லைன் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
