ரயில்களுக்கான உதிரிப்பாகங்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, எதிர்காலத்தில் ரயில் சேவையில் பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றை இறக்குமதி செய்வதற்கான டொலர்கள் இல்லாமையே அதற்குக காரணமாகும்.
குறிப்பிட்ட உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்ய முடியுமென்றால் 3 மாதங்கள் தேவைப்படும். இதன் காரணமாக எதிர்காலத்தில் இயக்கப்பட வேண்டிய ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் ரயில்வே திணணைக்கள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் தண்டவாளங்களையும் உரிய நேரத்தில் சீரமைக்க வேண்டும். எனினும் போதிய தண்டவாளங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் சில திருத்தப்பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சில ரயில்களின் என்ஜின் பகுதி பெட்டி மற்றும் மேற்கூரை மீது பயணிகள் ஏறிச் செல்கின்றனர்.
