எபனேசர் பள்ளிவாசல் தொடர்பாக சமூக ஊடகங்களில்
வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு*************
எபனேசர் பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் தெஹிவலை ரஹ்மான் ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பில் வத்தளையைச் சேர்ந்த இஸ்மத் என்பவரினால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஐந்து வீடியோக்களையும் உடனடியாக நீக்குமாறு கோட்டை நீதவான் இன்று (22) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பள்ளிவாசலை நிர்வகிக்கின்ற இம்தியாஸ் ட்ரஸ்டின் நம்பிக்கையாளர்களில் ஒருவரான டி.எல்.எம். இம்தியாஸினால் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சட்டத்தரணி ஹிக்மா யூசுபின் அறிவுறுத்தலில் சட்டத்தரணி சந்தீப கமகேயினால் இந்த மனு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.
குறித்த மனு மீதான விசாரணை இன்று நீதவான் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போதே,
வத்தளை இஸ்மதினால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஐந்து வீடியோக்களையும் நீக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதாவான், அன்று இஸ்மத் என்பரை மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணிகளான சந்தீல கம்மேத்திகே மற்றும் றிஸ்வான் உவைஸ் ஆகியார் மன்றில் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
