புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், கூரகல புனித பிரதேசம் மற்றும் பொத்துவில் முகுது மஹா விஹாரை உட்பட மூன்று இடங்கள் புதிய புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கையொப்பமிட்டுள்ளார்.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் 3 புனித பூமிகள் புனித தலங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரையும் இவற்றில் ஒன்றாகும்.
