Our Feeds


Tuesday, June 28, 2022

SHAHNI RAMEES

BREAKING: எரிபொருள் இறக்குமதிக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

 

எரிபொருள் இறக்குமதி மற்றும் சில்லறை விற்பனை 
செய்ய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி மற்றும் பிற வங்கிகளில் இருந்து அந்நிய செலாவணி தேவைகள் இல்லாமல் எரிபொருளை இறக்குமதி செய்யும் திறன் மற்றும் செயல்படும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிறுவனங்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக் கட்டணத்துடன் தளவாடங்கள், இருப்புக்கள் மற்றும் விநியோகத்திற்கான சேவை வழங்குநராக இருக்கும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

CEYPETCO இன் கீழ் தற்போதுள்ள 1190 விற்பனை நிலையங்கள் மற்றும் லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (LIOC) மற்றும் தெரிவு செய்யப்படும் புதிய நிறுவனங்களுக்கு புதிய விற்பனை நிலையங்கள் கிடைக்கப்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சுத்திகரிப்பு நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் இன்று காலை கட்டார் சென்றுள்ளனர்.

இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கட்டார் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் இருவரும் கலந்துரையாடவுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »