தற்போது தரையிறங்கும் எரிவாயு கப்பலை தவிற, மேலதிகமாக அடுத்த சில நாட்களுக்கு தேவையான எரிவாயுவை இறக்குமதி செய்யும் வேலைத் திட்டம் எதையும் முன்னைய நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
இன்று (15) காலை பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இது ஒரு கவலைக்குரிய செய்தியாக இருந்தாலும், அதை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் நான் இருக்கின்றேன். இந்த கப்பல் வந்ததில் இருந்து, அடுத்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு கப்பல் கூட திட்டமிடப்படவில்லை.
இது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
