விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சனத் நிஷாந்த எம்.பி, சமன் லான் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் குறித்த மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதற்கமைய, இரு சரீர மற்றும் தலா 10 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
