எரிபொருட்களை ஏற்றிக் கொண்டு இலங்கை வந்துள்ள நான்கு கப்பலுக்கான 180 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த முடியாமை காரணமாக துறைமுகத்துக்கு வெளியில் அவை நங்கூரமிட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.
பெற்றோல் மற்றும் டீசலை கொண்டுள்ள இரண்டு கப்பல்களும் மசகு எண்ணெய்யை ஏற்றி வந்துள்ள இரண்டு கப்பல்களும் இவ்வாறு நங்கூரமிட்டுள்ளதாகவும், அவற்றை விடுவிக்க டொலர்கள் இல்லாததால் கப்பல்களுக்கு தாமதமாக கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றுடன் வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கும் கடந்த 10ஆம் திகதிக்கு முன்னர் பணம் செலுத்தப்பட்டு அவை இறக்குமதி செய்யப்பட்டிருந்தால். தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஓரளவுக்கு தணிந்திருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
