சமையல் எரிவாயு தாங்கி கொண்ட கப்பல் ஒன்றை இலங்கைக்கு கொண்டு வர இன்னும் 14 நாட்களாகும் என லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மற்றொரு எரிவாயு கப்பலை இங்கு கொண்டு வர லிட்ரோ நிறுவன நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாம் வெறுமையான கடலை மட்டுமே பார்க்க முடியும் என்றும், அங்கு எரிவாயு கப்பல்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எரிவாயு தாங்கி கப்பல் ஒன்றை இங்கு கொண்டு வருவதற்கான இயலுமான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
