Our Feeds


Thursday, June 16, 2022

SHAHNI RAMEES

JUST_IN: நாட்டை வந்தடைந்த இறுதி டீசல் கப்பல்.

 

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் தற்போது கொழும்பை வந்தடைந்துள்ளது.

அதன்மூலம் 40,000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்று (16) அதிகாலை முதல் மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »