Our Feeds


Wednesday, June 15, 2022

SHAHNI RAMEES

VIDEO: 100 மணி நேர முயற்சிக்கு பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு..!

 

ஜாங்கிரி-ஷம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல், கடந்த 10 ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள பயனற்ற ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்பட பல குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் குறிப்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டதுஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் குழாய் வழியாக ஆக்சிஜன் அனுப்பப்பட்டது

தீவிரமாக நடந்த இந்த மீட்பு பணி 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்தது.இந்த நிலையில் 100 மணி நேரத்துக்கும் மேலான மீட்பு முயற்சிக்கு பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

இது குறித்து சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பதிவில் ;

அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் சாஹு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.என தெரிவித்துள்ளார் .




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »