Our Feeds


Wednesday, July 20, 2022

ShortNews Admin

09ம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோட்டா எப்படி வெளியேறினார்? - வெளியான திடுக்கிடும் தகவல்!



கடந்த ஜூலை 09 ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதி மாளிகையின் அறை ஒன்றில் இருந்ததாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய பாதுகாப்பு வேலியை உடைக்க முற்பட்ட வேலையில் வெளிவிவகார அமைச்சின் திசையிலிருந்து பெசில் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியதாகத் தெரியவந்துள்ளது. ஆரப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரும் முப்படைத் தளபதிகளும், பொலிஸ் மா அதிபரும் ஜனாதிபதி மாளிகையின் செயற்பாட்டு அறையில் இறுதித் தருணம் வரை பாதுகாப்புப் படையினரை வழிநடத்தியிருந்தனர்.

ஜனாதிபதி மாளிகையின் இரண்டாவது மாடியில் இருந்து லிஃப்ட் மூலம் கடற்படைத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் தலைமையில் ரணபாகு கப்பலில் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


நன்றி: தமிழன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »