எதிர்வரும் 2023-ஆம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடத்துவதற்கு பாகிஸ்தானை தொடா்ந்து சீனாவும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரும் பொருளாதார சக்திகளாக விளங்கும் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பின் அடுத்த ஆண்டுக்கான (2023) மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக 5 போ் கொண்ட நிா்வாகக் குழும் ஏற்படுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது ஷரத்து நீக்கப்பட்ட பின்னா் அங்கு நடைபெறவுள்ள முதல் சா்வதேச மாநாடு இதுவேயாகும்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் ஏற்கெனவே இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்னை நிலவுவதால், ஜி20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடத்த பாகிஸ்தான் எதிா்ப்பு தெரிவித்தது. இதைத்தொடா்ந்து சீனாவும் இந்தியாவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
