Our Feeds


Tuesday, July 5, 2022

ShortNews Admin

ஹாபிஸ் நஸீர் அஹமடின் உடைமைகளுக்கு தீ வைத்து சேதமேற்படுத்திய சந்தேகத்தில் 20 வயதான இளைஞர் கைது!



(கனகராசா சரவணன்)


ஏறாவூரில் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம், வீடு உறவினரின் வீடு, ஹோட்டல். வர்த்தக நியைம் ஆகியனவற்றுக்கு தீவைத்தமை மற்றும் ஆடைத்தொழிற்சாலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (04) 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து இதுவரை 38 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தாரர்.

கடந்த மே மாதம் (10) ஆம் திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம் வீடு அவரது உறவினரின் வீடு, ஹோட்டல் வர்த்தக நிலையம் என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத் தொழிற்சாலையை முற்றுகையிட்டு சேதமாக்கினர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து 16 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட இதுவரை 38 பேரை கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட 28 பேர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் ஏனைய 9 பேர் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கைது செய்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »