பிரித்தானிய அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான போராட்டங்கள், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் நீதி தொடர்பான உரிமைகள் குறித்து கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தியதாக அமைச்சர் தரிக் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்க பிரித்தானியா தயாராக இருப்பதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
