Our Feeds


Sunday, July 17, 2022

ShortNews

ஆட்டோக்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு விசேட திட்டம்!



(எம்.மனோசித்ரா)


முச்சக்கர வண்டிகள் மற்றும் மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகத்துக்கான முன்னோடி திட்டமாக நடமாடும் எரிபொருள் விநியோக வாகனங்களை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


எரிபொருள் பவுஸர்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு அப்பால் பெரிய திறந்த வெளிகளில் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், கலன்கள் உள்ளிட்டவற்றுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு இந்த முறைமை பயனுடையதாக அமையும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனை விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »