Our Feeds


Sunday, July 3, 2022

SHAHNI RAMEES

நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு- வெளியான அறிவிப்பு.

 


நாட்டில் எதிர்வரும் இரண்டு தினங்களில் சுழற்சி

முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


இதற்கமைய, ஜூலை 04, 05ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.


இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளைகளில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவு வேளைகளில் 1 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.


அத்தோடு, CC வலயங்களில் காலை 6 மணி தொடக்கம் 8.30 மணிவரையில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், MNOXYZ ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி தொடக்கம் காலை 8.30 வரையில் 3மணிநேர மின்வெட்டு அமுலாகும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »